Suriya: அது ஜோதிகாவின் 20 வருட பக்கெட் லிஸ்ட்! - 20ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம் பற்றி சூர்யா

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான டோண்ட் டிரபிள் தி டிரபிள் படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு - மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யாவும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

Dont Trouble The Trouble Team

இந்த நிகழ்வில் சூர்யா பேசுகையில், "எனக்கு மெசேஜ் அனுப்பாமல் மிக எளிமையாக அழைத்திருந்தால் கூட நான் நிச்சயமாக இங்கு வந்திருப்பேன். இங்கு இருப்பதில் எனக்கு அளப்பரிய மகிழ்ச்சி.

விருந்தோம்பல் என்பது நமக்கு மிகவும் பெருமைக்குரிய ஒரு வார்த்தை. விருந்தோம்பல் என்றால் என்னவென்றும், அதை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்றும் நமக்குத்தான் தெரியும் என்று நான் நினைத்திருந்தேன்.

ஆனால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்குச் சென்ற பிறகுதான் விருந்தோம்பல் என்றால் என்னவென்று கற்றுக்கொண்டேன். அவர்கள் காட்டும் உபசரிப்பையும் கவனிப்பையும் என்னால் செய்யவே முடியாது.

என்னைப் பொறுத்தவரை சினிமாவின் அழகே நம்மைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பதுதான். பிறந்தது முதல் நாமெல்லாம் சினிமா பார்த்து வருகிறோம்.

எனக்கு 50 வயதாகிறது. இப்போதும் அடுத்தடுத்த படங்கள், புதிய முயற்சிகள் என சினிமா நம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. இந்தத் திரைப்படத்தையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.

ஃபகத் ஃபாசில், எஸ்.எஸ். ராஜமௌலி சாரின் தயாரிப்பில், கார்த்திகேயாவுடன் இணைந்து இப்படி ஒரு படம் பண்ணுவார் என்று நாம் எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். இத்தகைய ஒரு வித்தியாசமான கதைக் களத்தை நாம் பார்த்ததே இல்லை.

நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு கதைக் களம் இது. திரையில் இதைப் பார்ப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நானும் ஃபகத் ஃபாசிலும் காலை, மதியம், மாலை, நள்ளிரவு, விடிய விடிய எனப் பல நேரங்களில் மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம்.

ஒன்றாக நிறைய நேரத்தைச் செலவழித்திருக்கிறோம். நாங்கள் இருவரும் சினிமா பயணத்தைத் தொடங்கிய போது நடந்த சம்பவங்கள், எங்களுக்குள் இருக்கும் ஒற்றுமைகள் என மனம்திறந்து நிறையப் பேசிய நினைவுகள் உள்ளன.

நாங்கள் இருவருமே எடுத்தவுடனே இந்த இடத்திற்கு வந்துவிடவில்லை. பல தடைகளையும் காயங்களையும் கடந்த பிறகே நிமிர்ந்து நிற்க முடிந்தது. என்னுடன் இவ்வளவு அழகான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும், மனதைத் திறந்து பேசியதற்கும் நன்றி" எனப் பேசினார்.

Suriya - Don't Trouble The Trouble
Suriya - Dont Trouble The Trouble

சமீபத்தில் சூர்யா - ஜோதிகா தம்பதியினர் தங்களின் 20-ஆம் ஆண்டு திருமண நாளை மிகப்பிரமாண்டமாகக் கொண்டாடியிருந்தனர்.

அது குறித்து சூர்யா, "ஜோதிகாவின் 20 ஆண்டுகால பக்கெட் லிஸ்ட் அது. அதனை மீண்டும் எங்களால் ரீகிரியேட் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மிகவும் அழகாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது.

எங்கள் திருமணப் பந்தத்திற்கு நீங்கள் அனைவரும் தொடர்ந்து அளப்பரிய அன்பையும் மரியாதையையும் கொடுத்து வருகிறீர்கள். அதனால்தான், அந்தச் சந்தோஷமான தருணங்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.