விராத் கோஹ்லி, சுப்மன் கில் அபார சதங்கள்.. மே.இ.தீவு அணியை வீழ்த்திய இந்தியா...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஜஸ்டின் கிரீவ்ஸின் சதம் மற்றும் அமீர் ஜங்கூவின் அரைசதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 295 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 296 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஜோடி சரிவைத் தடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
கேப்டன் சுப்மன் கில் 110 ரன்களும், விராட் கோலி சிக்சருடன் தன் சதத்தை நிறைவு செய்து ஆட்டமிழக்காமல் 139 ரன்களும் விளாசினர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி எளிதில் இலக்கைக் கடந்து வெற்றி பெற்றது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


