Taapsee Pannu: ``வயிற்றில் தேங்காய் அடிப்பதில் என்ன கவர்ச்சி இருக்கிறது? - நடிகை டாப்சி

பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்சி பண்ணு. இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார்.

அந்தப் பேட்டியில் தன் திரை அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார். அவர் பேட்டியில், ``ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்துக்கு ஒப்பந்தமாகியிருந்தேன். பிறகு திடீரென நீக்கப்பட்டேன். ஏன் எனக் கேட்டபோது அந்த ஹீரோவின் மனைவிக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றார்கள். அந்த நடிகரின் மனைவிக்கு என்னை ஏன் பிடிக்கவில்லை என்று எனக்கு இன்றுவரை தெரியாது.

டாப்சி பண்ணு

மற்றொரு படத்தில் ஏற்கனவே ஒப்பந்தமாகித் என் கால்ஷீட்டையும் ஒதுக்கிய நிலையில், எனக்குத் தெளிவான எந்தக் காரணமும் கூறப்படாமல் படத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டேன். கதாநாயகனின் அழுத்தம் காரணமாகவே நான் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதினேன். ஆனால், ஊடகங்கள் வாயிலாகவே நான் அப்படத்திலிருந்து நீக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். ராசி இல்லாத நடிகை என்ற விமர்சனத்தையும் எதிர்க்கொண்டிருக்கிறேன்.

திரைத்துறைக்கு வந்த புதிதில் எனக்கு சினிமா அனுபவம் இல்லாததால், படப்பிடிப்பில் நடப்பவை அனைத்தும் திரைத்துறையின் இயல்பான நடைமுறை என்றே நினைத்தேன். படப்பிடிப்பின் போது ஒரு காட்சி மிகையான பாலியல் தன்மையுடன் எடுக்கப்படுகிறது என்பதை அனுபவமின்மையால் என்னால் உணர முடியவில்லை.

 டாப்சி பண்ணு
டாப்சி பண்ணு

படம் வெளியாகித் திரையில் பார்க்கும்போதே, அது தேவையற்ற முறையில் படமாக்கப்பட்டிருப்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தேன். தெலுங்கில் அறிமுகமான படத்தில், கவர்ச்சியை வெளிப்படுத்துவதாகக் கூறி என் வயிற்றின் மீது தேங்காய் எறியப்பட்டது. வயிற்றில் தேங்காய் அடிப்பதில் என்ன கவர்ச்சி இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை" எனத் தனது கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.