“First சாக்லேட் ... Next ஐபோன்” - ஊழியர்களுக்கு பரிசளித்து நெகிழ வைத்த UAE நிறுவனம்!
“எனக்கும் அந்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமா?”... சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோவைப் பார்த்த பிறகு, பலரும் கேட்கும் கேள்வி இதுதான். காரணம், UAE-யின் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அதன் நிர்வாகம் வழங்கிய வித்தியாசமான பரிசு!
கேரளாவைச் சேர்ந்த ஹசீனா நிஷாத், UAE-யில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தின் Managing Director-ஆக உள்ளார். இவருடைய கணவர் நிஷாத் ஹுசைன் அந்த நிறுவனத்தின் Chairman. இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு புத்தம் புதிய iPhone-களை பரிசாக வழங்கியுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோவை ஹசீனா நிஷாத் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், மேசையில் வைக்கப்பட்டிருந்த மூடப்பட்ட Gift Box-களில் இருந்து ஊழியர்கள் ஒவ்வொருவராக ஒரு Gift Box தேர்வு செய்கிறார்கள்.
அதில் சில ஊழியர்களுக்கு iPhone கிடைக்கிறது. ஆனால், சிலருக்கு iPhone-க்கு பதிலாக Chocolate கிடைக்கிறது. இதனால் நமக்கு ஐபோன் இல்லையா என்று நினைத்தபோது ஒரு எதிர்பாராத திருப்பம்... சாக்லேட் பெற்றவர்களுக்கும் ஐபோனை பரிசளித்து ஊழியர்களை நெகிழ வைத்தார் ஹசீனா நிஷாத்.
இதுகுறித்து ஹசீனா, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஊழியர்களின் அர்ப்பணிப்பு, நேர்மறையான அணுகுமுறை மற்றும் ஒற்றுமையான செயல்பாடு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரின் முயற்சியும், யோசனையும், பங்களிப்பும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ 2.4 மில்லியனுக்கும் அதிகமான views பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்துள்ளனர். “Is there a vacancy?” என்று ஒருவர் கேட்க, மற்றொருவரோ, “நானும் இந்த நிறுவனத்தில் சேர விரும்புகிறேன்” எனவும் இன்னொரு comment-ல், “என்னுடைய boss இது AI என்று சொல்கிறார்” என்று ஒருவர் கிண்டலாகவும் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

