நேற்று பயங்கர சரிவு.. இன்று மீண்டும் எழுச்சி.. இந்திய பங்குச்சந்தையின் இன்றைய நிலை..
நேற்று பயங்கர சரிவைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள், இன்று வர்த்தகத்தில் மீண்டு எழுச்சியைக் கண்டன.
உலக சந்தைகளின் நேர்மறையான போக்கு மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற காரணங்களால் சென்செக்ஸ் 315 புள்ளிகள் உயர்ந்து 73,895.74 என்ற புள்ளிகளிலும், நிஃப்டி 23,100 புள்ளிகளைக் கடந்து 23,140.50 என்ற புள்ளிகளிலும் நிறைவடைந்தன.
அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் குறித்த முன்னேற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் ஆர்வம் சந்தைக்கு கைகொடுத்தன. துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ரியால்டி மற்றும் ஆட்டோ பங்குகள் உயர்வுடன் முடிவடைந்தன.
மறுபுறம், இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக 14 பைசா அதிகரித்து 95.85 என்ற அளவில் வர்த்தகமானது. எனினும், சந்தையில் ஒட்டுமொத்த எச்சரிக்கை உணர்வு இன்னும் நீடிப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


