40+... உழைப்பை நிறுத்துங்கள்... உங்களை உயர்த்தும் Leverage Pointஐப் பிடிப்பது எப்படி?
இரவு 11 மணி. வீடே அமைதியில் மூழ்கியிருக்க, உங்கள் மடிக்கணினியின் மெல்லிய வெளிச்சத்தில் கணக்கு வழக்குகளைப் பார்க்கிறீர்கள். 40 வயதைத் தொட்டுவிட்டீர்கள்.
“நாம் இன்னும் மாபெரும் செல்வத்தைச் சேர்க்கவில்லையா? நம் தகுதிக்கும் திறமைக்கும் இதுதான் எல்லையா?” என்ற ஏக்கமும் பசியும் நெஞ்சை அடைக்கிறது.
பயப்படாதீர்கள்! இது பேராசை அல்ல; உங்கள் உழைப்பிற்குக் கிடைக்க வேண்டிய உண்மையான சுதந்திரத்திற்கான தாகம்.
ஆர்க்கிமிடிஸ் காட்டிய பாதை
பணத்தைச் சேர்க்கும் முயற்சியில் பெரும்பாலானவர்கள் தவறான பாதையையே தேர்ந்தெடுக்கிறார்கள். "இன்னும் கூடுதல் மணிநேரம் உழைப்போம்" என்று தங்களை வருத்திக்கொள்கிறார்கள்.
கிரேக்க இயற்பியலாளர் ஆர்க்கிமிடிஸ் (Archimedes) சொன்ன ஒரு வரலாற்று உண்மை உங்களுக்குத் தெரியுமா? “எனக்கு நீளமான ஒரு நெம்புகோலும் (Leverage), அதை ஊன்ற ஒரு புள்ளியும் கிடைத்தால், இந்த உலகத்தையே நான் நகர்த்திக் காட்டுவேன்!”
20 மற்றும் 30-வயதுகளில் உங்கள் நேரத்தையும் உடலுழைப்பையும் விற்றுப் பணம் சம்பாதித்தீர்கள். ஆனால், 40-களில் நீங்கள் செய்ய வேண்டிய மிகப்பெரிய சிந்தனை மாற்றம் என்ன தெரியுமா?
நேரத்தை விற்பதை நிறுத்திவிட்டு, உங்களின் வளர்ச்சியை வேகப்படுத்தும் அந்த ‘நெம்புகோலை’ கையிலெடுப்பது!
நீங்கள் தவறவிடும் அந்த ‘அனுபவப் புள்ளி’!
40 வயதில் உங்கள் மிகப்பெரிய சொத்தே, கடந்த 20 ஆண்டுகளில் நீங்கள் சேர்த்த பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனும் மனித உறவுகளும்தான்.
இவற்றை உங்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல் இப்போதும் உங்கள் நேரத்தை மட்டுமே விற்றுச் சம்பாதிப்பது, குண்டூசியால் மலையைத் தோண்டுவதற்குச் சமம்.
மாறாக, உங்கள் அனுபவத்தை மூலதனமாக்குங்கள். அறிவுசார் சொத்துக்கள் (Intellectual Property), தொழிலில் பங்குடைமை (Equity), மற்றும் திறமையான நபர்களை இணைக்கும் நெட்வொர்க் எனும் ‘நெம்புகோல்களை (Leverage Points)-ஐ’ உருவாக்குங்கள்.
இழப்பு என்று வந்தால் குறைவான இழப்பு, ஆனால் ஜெயித்தால் பன்மடங்கு லாபம் எனச் சமச்சீரற்ற வாய்ப்புகளில் (Asymmetric Bets) உங்கள் நேரத்தை முதலீடு செய்யுங்கள்.
திருப்புமுனை உங்கள் கையில்!
மாபெரும் கடற்படைக் கப்பலைத் திருப்ப, அதன் முழு சுக்கானையும் அசைக்க வேண்டியதில்லை; அதன் முனையில் இருக்கும் ட்ரிம் டேப் (Trim Tab) என்ற மிகச்சிறிய துடுப்பைச் சிறிதளவு திருப்பினாலே போதும், பிரமாண்ட கப்பலே தன் திசையை மாற்றும்.
40 வயது என்பது வேகத்தைக் குறைக்கும் தருணமல்ல; உங்கள் வாழ்வின் உச்சகட்ட ஆட்டத்தின் தொடக்கம். கடிகாரத்தைப் பார்த்து உழைப்பதை நிறுத்துங்கள்; நெம்புகோல்களை உருவாக்கத் தொடங்குங்கள். நீங்கள் தேடும் மாபெரும் செல்வம், உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது

நெம்புகோல்களில் ஒன்று - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸ்
பணம் என்பது வளராது. அது பொருள்களை வாங்கும் மாற்றுப் பண்டம் மட்டுமே. வாழ்வில் செல்வம் சேர்க்க, வெறித்தனமாக சொத்துக்களைச் சேர்க்க வேண்டும்.
வளராத பணத்தைக் கொண்டு, நாளை பன்மடங்கு பெருகும் சொத்துக்களைக் குவிப்பதே செலவத்தை வளர்க்கும் ரகசியம்.
உங்களைச் செல்வந்தர் ஆக்கும் நெம்புகோல்களில் ஒன்றுதான் நிறுவனப் பங்குகள். இவற்றில் பல மடங்கு ரிஸ்க் உள்ளது உண்மையே. ஆனால் எங்கு ரிஸ்க் இருக்கிறதோ, அங்கேதான் வாய்ப்பும் கொட்டிக் கிடக்கிறது.
நிறுவனப் பங்கு சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸ்-ல் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கான ஸ்திரமான செல்வத்தினை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்க முடியும்.
காரணம் 1995-ல், NIFTY 50 (இந்தியாவின் டாப் 50 நிறுவனங்கள் கொண்ட இண்டெக்ஸ்) ஆரம்ப விலை ரூ. 1000. இன்று அதன் விலையோ ரூ.23000+. கிட்டத்தட்ட 2200% வளர்ச்சி! இன்னும் வாய்ப்புக்காகக் காத்திருக்கப் போகிறீர்களா?

இது உங்களுக்கான நேரம்
உங்களின் தகுதியை வளர்த்துக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டுமா? பண ரீதியான உங்களின் பார்வைக் கோணத்தை மாற்றி அமைக்க வேண்டுமா? உங்கள் வாழ்வில் நிறைய செல்வம் சேர்க்க வேண்டுமா? பணக்காரர்கள் பயன்படுத்தும் யுக்திகளை அறிய வேண்டுமா?
செல்வம் சேர்க்க 10 கட்டளைகள் - இலவச ஆன்லைன் நிதி நிர்வாக நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொண்டு உங்கள் வாழ்வினை மாற்றும் முதல் அடியை எடுத்து வையுங்கள்.
செப்டம்பர் 27, ஞாயிறு காலை 11 மணிக்கு ஆன்லைனில் நடைபெறுகிறது. 100 இடங்கள் மட்டுமே. முன்பதிவு கட்டாயம். ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-sep27-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_sep27_2026
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

