Radhika Apte: அதனால் 4 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை! - ராதிகா அப்தே

நடிகை ராதிகா ஆப்தே நடிப்பில் இப்போது லஸ்ட் ஸ்டோரீஸ் 3 திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

ராதிகா ஆப்தே | Radhika Apte

தனது திரைப்பயணத்தில் எதிர்கொண்ட மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம் ஒன்றைக் குறித்து சமீபத்திய பேட்டியில் இவர் பகிர்ந்திருக்கிறார்.

அவர், "சினிமாவில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதைப் பற்றிப் பேசுவது சுலபம். ஆனால், அப்படி நான் நடித்த படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் கசிந்தபோது, என்னால் தொடர்ந்து 4 நாள்களுக்கு வீட்டை விட்டே வெளியே வர முடியவில்லை.

இது போன்ற பிரச்னைகள் சமூக வலைதளங்களோடு நின்றுவிடுவதில்லை, மிக விரைவாக நமது வீட்டின் கதவு வரை வந்துவிடும். யாராவது தவறான எண்ணத்தோடு நமது வீட்டு வாசலில் வந்து நிற்கக்கூட வாய்ப்பு இருக்கிறது.

ராதிகா ஆப்தே | Radhika Apte
ராதிகா ஆப்தே | Radhika Apte

அந்தக் காட்சி லீக்கான போது, எனது ஸ்டைலிஸ்ட்டின் டிரைவர் அந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, நீங்க உண்மையிலேயே அவர் வீட்டிற்குத்தான் செல்கிறீர்களா? என்று கேட்டுக்கொண்டே இருந்தாராம்.

எனது வாட்ச்மேனும் அந்த வீடியோவைப் பார்த்திருந்தார். அந்தச் சமயத்தில் நான் தனியாகத்தான் வசித்து வந்தேன். அதனால் பாதுகாப்பு குறித்து எனக்குப் பயம் ஏற்பட்டது.

ஆனால், அவர், நாங்கள் உங்களைப் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி எனக்கு ஆதரவாக நின்றார்கள்" எனப் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.