ஆசிய விளையாட்டு போட்டி.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தங்கம் கிடைக்குமா? மழை வில்லனாகுமா?

 

ஆசிய விளையாட்டு போட்டிகளில் செப்டம்பர் 22 அன்று நடைபெற்ற பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியா 3-2 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. சிரியா அகுலா மற்றும் யஷஸ்வினி கோர்படே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்த வெற்றி சாத்தியமானது.

 

இதற்கிடையே, பெண்களுக்கான பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இந்திய அணி ஜப்பானிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. எனினும், இந்தியாவின் மரெஸ் ஜோலி மற்றும் காயத்ரி கோபிசந்த் இணை உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜப்பானிய அணிக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

 

குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சாக்ஷி சௌத்ரி, பாரிஸ் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற ஐரா வில்லேகஸை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தார். 

 

மேலும், ஆடவர் 4x100 மீ கலப்பு தொடரோட்டப் பந்தயத்தின் இறுதிப்போகுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. கிரிக்கெட் தங்கப்பதக்க இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கையை எதிர்த்து இன்று விளையாடுகிறது.. ஆனால் மழை காரணமாக போட்டி தாமதம் ஆகிறது.

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.