முதல் பந்தில் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த அபிஷேக் சர்மா.. பாராட்டிய ஜெயசூர்யா

 

ஜப்பானுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார். 
 

கடந்த வாரம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த இவர், தற்போது ஒரு  ஆண்டில் அதிக முறை அதாவது 10 முறை ஆட்டமிழந்த வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பு ரஷித் கான் (9 முறைகள், 2019) மற்றும் ஷதாப் கான் (9 முறைகள், 2024) ஆகியோர் இந்தப் பட்டியலில் முன்னிலையில் இருந்தனர்.

 

டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 34 பந்துகளில் 108 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா, இந்திய வீரர்களில் மிகவேகமாக (30 பந்துகளில்) சதம் கடந்தவர் என்ற சாதனையைச் சொந்தமாக்கியிருந்தார். 

 

இந்நிலையில், சமீபத்தில் இலங்கையின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூரியா, அபிஷேக் சர்மா அணியில் தனது பங்கை உணர்ந்து சிறப்பாகச் செயல்படுவதாகவும், இந்தியாவின் இளம் திறமையாளர்கள் நாட்டின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறியாக இருப்பதாகவும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.