அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமா ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் காதல் மற்றும் அதிரடித் திரைப்படமான ‘அன்பில் அவன்’ (Anbil Avan) படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் கார்த்திக் ராமகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் அசோக் செல்வன் (Ashok Selvan) மற்றும் பிரீத்தி முகுந்தன் (Preity Mukundan) முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ‘போர்தொழில்’ புகழ் விக்னேஷ் ராஜா இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Happy High Pictures (@happyhighpic)

முன்னதாக இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 2 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.