கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் புதிய திரைப்படங்களில் ஒன்றான ‘ராவடி’ (RAAWADI) படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் பாசில் ஜோசப் (Basil Joseph) மற்றும் எல்.கே. அக்‌ஷய் குமார் (Akshay Kumar) ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜாஃபர் சாதிக், ஷாரிக் ஹாசன் மற்றும் ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Seven Screen Studio (@7_screenstudio)

ஜேன் மியூசிக் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தை வரும் டிசம்பர் 24, 2026 அன்று கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே தேதியில் நேரடியாக வெளியாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு முழுமையான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. “ஊரு சைடு பாய்ஸ் வராங்க” என்ற வைப் உடன் உருவாகியுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.