ஆப்கன் தொடரில் வைபவ் சூர்யன்வன்ஷிக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை? கெளதம் கம்பீர் விளக்கம்...

 

 

இந்திய அணியின் இளம் வீரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, ஜிம்பாப்வே தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தால் இரண்டு அரைசதங்கள் விளாசி தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். 

 

இருப்பினும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சமீபத்திய டி20 தொடரில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இளம் வீரரான சூர்யவன்ஷி தனது திறமைக்கான வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

 

பல ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் மூத்த வீரர்களுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அணிக்குள் பொருத்தமான நேரம் வரும்போது சூர்யவன்ஷிக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் கம்பீர் உறுதியளித்துள்ளார்.


Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.