கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா.. மரண பயத்தை காண்பித்த ஜிம்பாவே..
ஹராரே மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராசா இறுதிவரை போராடி ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து 272 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களின் சிறப்பான தாக்குதலால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இருப்பினும், பொறுப்புடன் விளையாடி சதம் விளாசிய ஜோஷ் இங்லிஷ் 103 ரன்கள் குவித்து அணிக்கு அஸ்கானமாக நின்றார்.
போட்டியின் இறுதி வரை பரபரப்பாகச் சென்ற ஆட்டத்தில், நாதன் எல்லிஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


