ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்க வேண்டுமானால் அமெரிக்காவிற்கு 7 நிபந்தனைகள் - ஈரான் புது நகர்வு

ஈரான் போரைத் தாண்டி உலக நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் தான்.

அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு...

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெஸாயி தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரான் அரசு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு 7 நிபந்தனைகளைத் தெரிவித்துள்ளது.

டெஹ்ரானின் செய்தி மிகவும் தெளிவானது மற்றும் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

வாஷிங்டன் தாங்கள் உருவாக்கிய சேற்றுக்குள் இருந்து தப்பிக்கவும், அதில் மேலும் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கவும் விரும்பினால், ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

ஈரான் - அமெரிக்கா
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி, ஈரான் கூறும் 7 நிபந்தனைகள்...

1. அனைத்து முனைகளிலும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

2. முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகள் அனைத்தையும் விடுவிக்க வேண்டும்.

3. அமெரிக்காவின் கடல் முற்றுகையை முற்றிலுமாக விலக்கிக்கொள்ள வேண்டும்.

4. ஈரானுக்குள் அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் நிறுத்த வேண்டும்.

5. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கத் தலையீட்டை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

6. புரட்சி எதிர்ப்பு அமைப்புகளுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை நிறுத்த வேண்டும்.

7. அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு, ஹார்முஸ் நீர்ச்சந்தி மீண்டும் திறந்துவிடப்படும்.

காலிபாஃப் விளக்கம்

Al Jazeera-க்கு ஈரானின் நாடாளுமன்றச் சபாநாயகர் காலிபாஃப் சொல்லியுள்ள தகவலின் படி, “எங்களது செய்திகளும் நிபந்தனைகளும் இடைத்தரகர்கள் மூலம் எதிர்தரப்பிற்குத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு, ஈரானிய மக்களின் மறுக்க முடியாத உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அமெரிக்கர்கள் தங்களது வாக்குறுதிகளைச் செயல்படுத்தும் வரை, பழைய பேச்சுவார்த்தை முறைக்குத் திரும்புவதற்கோ அல்லது ஹார்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் திறப்பதற்கோ வாய்ப்பே இல்லை” என்று கூறியிருக்கிறார்.

ஈரான் இதுவரை பேச்சுவார்த்தை குறித்து அதிகமாக பொதுவெளியில் பேசியதில்லை. ஆனால், இப்போது பேசுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.