அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இயக்குநர் இரா.சரவணனின் ‘நந்தன் 2’: சமூகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கத் தயாராகும் இரண்டாம் பாகம்!

தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட கதைகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில், மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘நந்தன்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக ‘நந்தன் 2’ (Nandhan 2) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் ஏற்படுத்திய சமூக தாக்கம் மற்றும் விழிப்புணர்வைத் தொடர்ந்து, அதன் அடுத்த கட்டப் பயணமாக இந்தப் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
View this post on Instagram
இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா (Nivas K Prasanna) இசையமைக்கவுள்ளார். “தொடர வேண்டிய ஒரு கதை… இன்னும் விடை கிடைக்காத ஒரு கேள்வி…” என்ற கருப்பொருளுடன் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரலையும், சமூக யதார்த்தங்களையும் மேலும் ஆழமாகப் பேசும் இந்தப் படைப்பின் மீதான அறிவிப்புக்கு ரசிகர்கள் தங்களது வரவேற்பைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


