ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா: ரஜினியின் மாஸ் படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள்!

தமிழ் சினிமாவின் வசூல் மன்னரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’ (Jailer 2). முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உருவாகிவரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sun Pictures (@sunpictures)

இந்நிலையில், இப்படத்தின் உலகை மேலும் மெருகேற்றும் வகையில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகம் வெளியாகியுள்ளது. அதன்படி, பாலிவுட்டின் முன்னணி நடிகையான வித்யா பாலன் (Vidya Balan) இப்படத்தில் ‘காந்தா’ (Kantha) என்னும் கதாபாத்திரத்திலும், மிரட்டலான நடிப்பிற்குப் பெயர்பெற்ற எஸ்.ஜே. சூர்யா (SJ Suryah) ‘போதி கல்பக்’ (Bodhi Kalpak) என்னும் கதாபாத்திரத்திலும் நடிப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sun Pictures (@sunpictures)

ரஜினிகாந்துடன் வித்யா பாலன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்திருக்கும் இந்த அதிரடித் திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.