2027 ஆஸ்கார் களத்தில் மராத்தி படம்: இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கொண்டால்’!

உலக சினிமா அரங்கின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகளுக்கான (Oscars 2027) போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் அதிகாரப்பூர்வத் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குநர் சந்தோஷ் தவாகர் (Santosh Davakar) இயக்கத்தில் உருவான மராத்தி திரைப்படமான ‘கொண்டால்’ (Gondhal) திரைப்படம், ஆஸ்கார் களத்திற்கு ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஆஸ்கார் ரேஸில் இடம்பிடிக்க மொத்தம் 33 முன்னணி திரைப்படங்கள் போட்டியிட்டன. பல்வேறு மொழிகளில் இருந்து வந்த இந்தப் படங்களை மதிப்பீடு செய்த பிரபல திரைப்பட இயக்குநர் பி. சேஷாத்ரி (P. Sheshadri) தலைமையிலான தேர்வுக்குழு, தீவிரமான ஆய்வுகளுக்குப் பிறகு ‘கொண்டால்’ திரைப்படத்தை இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாகத் தேர்வு செய்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Cocktail Studio (@cocktailstudioofficial)

இந்தியத் திரையுலகில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும் 4-வது மராத்தி திரைப்படம் என்ற பெருமையைப் ‘கொண்டால்’ பெற்றுள்ளது. கிராமத்துப் பின்னணியும் வலுவான கதைக் களமும் கொண்ட இப்படம் உலகளாவிய சினிமா ரசிகர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆஸ்கார் மேடையில் இந்தியாவின் பெருமையை உயர்த்த இப்படம் தகுதியானது என்று சினிமா வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.