ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இயக்குநர்களில் ஒருவரான ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய அதிரடித் திரைப்படம் ‘சிக்மா’ (Sigma). இப்படத்தின் மூலம் அவர் இயக்குநராகக் களம் இறங்குவதால் கோலிவுட்டில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

சுந்தீப் கிஷன் மற்றும் ஃபாரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் விளம்பரப் பணிகளில் தனது தந்தையும், தமிழக முதலமைச்சருமான தளபதி விஜய் கலந்துகொள்ள மாட்டார் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “என் தந்தை இந்தப் படத்தின் ரிலீசுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் எனது படத்திற்குப் பிரமோஷன் செய்யமாட்டார். விளம்பரங்கள் அனைத்தும் படத்தை மையமாக வைத்து இருக்க வேண்டுமே தவிர, அவரைப் பற்றி இருக்கக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அது படத்தின் மீது தேவையில்லாத கவனத் திசைதிருப்பலை ஏற்படுத்தக் கூடாது என்று நினைக்கிறேன். மேலும், அவர் தற்போது தமிழக முதல்வராக இருப்பதால் ஏராளமான அரசுப் பொறுப்புகளுடன் பிஸியாக உள்ளார். அவர் நான் என்ன செய்திருக்கிறேன் என்பதைப் பார்க்க ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

மேலும், தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்ட மிக முக்கியமான குணம் என்ன என்ற கேள்விக்குச் சற்றும் தாமதிக்காமல் ‘நேரம் தவறாமை’ (Punctuality) என்று ஜேசன் சஞ்சய் பதிலளித்தார். தளபதி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றது குறித்த தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய அவர், தமன் இசையில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.