20 ஆண்டுகால காதலை கொண்டாடிய சூர்யா – ஜோதிகா: மீண்டும் மோதிரம் மாற்றி புது vows செய்த நட்சத்திர ஜோடி!

தமிழ் திரையுலகின் மோஸ்ட் வான்டெட் மற்றும் மிகவும் விரும்பப்படும் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளனர். கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி திருமண பந்தத்தில் இணைந்த இந்த ஜோடி, தற்போது தங்களது 20-வது ஆண்டு திருமண நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் மீண்டும் ஒருமுறை தங்களது திருமணச் சபதங்களை (Vow Renewal) புதுப்பித்துக் கொண்ட அழகிய தருணங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

கிறித்துவ முறைப்படி நடைபெற்ற இந்த எளிய மற்றும் அழகான விழாவில், வெள்ளை நிற வெட்டிங் கவுனில் ஜோதிகாவும், வெள்ளை நிற கோட் சூட்டில் சூர்யாவும் கலக்கலாகக் காட்சி அளித்தனர். இவர்களின் பிள்ளைகளான தியா மற்றும் தேவ் மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜோதிகாவை வெள்ளை உடையில் பார்த்ததும் நடிகர் சூர்யா நெகிழ்ந்து கண்ணீர் விட்ட தருணம் பலரையும் ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Jyotika (@jyotika)

இந்தச் சிறப்புமிக்க தருணம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஜோதிகா, “தி சீக்வெல் – எங்கள் 20 வருட காதல் மற்றும் போராட்டங்களின் கொண்டாட்டம். இது ஒரு பரிபூரணமான தம்பதியரின் கொண்டாட்டம் அல்ல; மாறாக எங்களது குறைகள், சர்வ சாதாரணமான புரிதல்கள், தியாகங்கள் மற்றும் நிபந்தனையற்ற அன்பிற்கான கொண்டாட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார். சூர்யா போன்ற ஒரு அற்புதமான நண்பன், வாழ்க்கை துணை கிடைத்தது தனது மிகப்பெரிய வரம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். கோலிவுட் திரையுலகினரும், ரசிகர்களும் இந்த நட்சத்திர ஜோடிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.