சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

 

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, அணியில் 25 சதவீத பங்கு கேட்டதாக வெளியான தகவலை சிஎஸ்கே நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து பேசிய மூத்த சிஎஸ்கே நிர்வாகி, தோனி தன்னிடம் இது பற்றி எப்போதுமே கேட்டதில்லை என்றும், என். சீனிவாசனிடமும் இது குறித்து பேசப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

 

இருப்பினும், தோனி கைவசம் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் அதிகமான பங்குகள் தனியார் பரிவர்த்தனை மூலம் உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் அணிகளின் சந்தை மதிப்பின்படி தோனியின் பங்குகளின் மதிப்பு சுமார் 2.6 முதல் 3 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

 

முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து பேசுகையில், 1.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு பிராண்டில் 25 சதவீத பங்கைக் கேட்பது என்பது முற்றிலும் யதார்த்தத்திற்கு மாறான மற்றும் திட்டமிடப்பட்ட ஒரு பொய்யான செய்தி என்று விமர்சித்துள்ளார். 

 

ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக வலிமையான ஒரு பிராண்ட் ஆகும். இத்தகைய மிகப்பெரிய மதிப்புகொண்ட அணியில் யாாரும் அவ்வளவு எளிதில் பங்குகளை வழங்க மாட்டார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தோனி தொடர்ந்து சிஎஸ்கே அணியின் முக்கிய அங்கமாகவே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.