ரகசியமும் ஆபத்தும் நிறைந்த ‘திக் திக் திக்’ டீசர்: நடிகர் ஆர்யா வெளியிட்ட மிரட்டலான வீடியோ!

ஒவ்வொரு முகத்திற்கும் பின்னால் ஒரு இரகசியமும், ஒவ்வொரு இரகசியத்திற்கும் பின்னால் ஒரு ஆபத்தும் மறைந்துள்ளது என்ற சுவாரஸ்ியமான ஒன்-லைன் கதைக் களத்துடன் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘திக் திக் திக்’ (Dhik Dhik Dhik). இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார் தயாரிப்பில், ஸ்ரீனிவாசன் சிவஜிராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பவெல் நவகீதன், சந்தினி தமிழரசன், சாண்ட்ரா எமி, பிஜேஷ் நாகேஷ், பவித்ரா ஐயர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரகு ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய, டி.கே. இசையமைத்துள்ளார்.
Behind every face lies a secret. Behind every secret lies danger.
Here is the most awaited teaser of #DhikDhikDhik!
Teaser Link
: https://t.co/hSpmqh6fpc@Pavelnavagethan @JSKfilmcorp @IamChandini_12 @sandra_amyy@BijeshNagesh@saisrinivas_dir @DOP_RRG @editorpremb… pic.twitter.com/oJxgIwje2V
— Arya (@arya_offl) September 10, 2026
இந்நிலையில், இப்படத்தின் அதிரடியான மற்றும் த்ரில்லர் நிறைந்த டீசரை பிரபல நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். டீசரில் இடம்பெற்றுள்ள மிரட்டலான காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான பின்னணி இசை ரசிகர்களை ஈர்த்துள்ளதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

: https://t.co/hSpmqh6fpc@Pavelnavagethan @JSKfilmcorp @IamChandini_12 @sandra_amyy@BijeshNagesh@saisrinivas_dir @DOP_RRG @editorpremb… pic.twitter.com/oJxgIwje2V

