சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்டிருந்தன. அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, யார் இப்படி அனுப்புகிறார்கள் என்ற விவரங்களைச் சேகரித்தார். அப்போது தான் படிக்கும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றும் மூர்த்தி (34) என்பவர்தான் இந்தச் செயலில் ஈடுபட்டு வருவதை மாணவி கண்டுபிடித்தார். பின்னர் அது தொடர்பாக தன்னுடைய பெற்றோரிடம் மாணவி தகவலைத் தெரிவித்தார்.

கைது

உடனடியாக மாணவியின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்துக்கும் உடற்கல்வி ஆசிரியரிடமும் இனிமேல் இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதன் பிறகும் ஆசிரியர் மூர்த்தி திருந்தவில்லை. முன்பை விட மாணவிக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். குறிப்பாக ஐ லவ் யூ என்றும் மெசேஜ் அனுப்பி இருந்தார். இதையடுத்து அரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரும்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார், ஆசிரியர் மூர்த்தியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர் மூர்த்தி ஆபாச மெசெஜ் அனுப்பியது உறுதியானது. இதையடுத்து போக்சோ வழக்கு பதிவு செய்த போலீஸார், ஆசிரியர் மூர்த்தியை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.