“திருமணம்தான் வாழ்க்கை இல்லை…” திருமணம் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) ஓப்பனாகப் பேச்சு!

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் வலம் வந்தவர் திவ்யா ஸ்பந்தனா (Ramya). சினிமா மற்றும் பொதுவாழ்வில் தனது துணிச்சலான கருத்துகளால் அறியப்படும் இவர், சமீபத்தில் திருமணம் மற்றும் உறவுகள் குறித்த தனது தனிப்பட்ட எண்ணங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து அவர் பேசுகையில், “திருமணம் மட்டுமே எனது அடையாளத்தை ஒருபோதும் வரையறுத்துவிட முடியாது. திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒருவரால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது சாத்தியமே. வாழ்க்கையில் மிக முக்கியமானது மகிழ்ச்சியாக இருப்பதுதான். இரண்டு நபர்களுக்கு இடையே நல்ல நட்பு, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் ஆழமான புரிதல் இருந்தால் மட்டுமே திருமணம் என்பது ஒரு அழகான முடிவாக இருக்க முடியும். ஆனால், எனக்கு ஏற்ற சரியான நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
சமூகத்தின் வழக்கமான கட்டாயங்களை விட தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் மனநிம்மதிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இவரது இந்தக் கருத்து, இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


