தலைவன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ மாஸான போஸ்டர் வெளியீடு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரவி மோகன் தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதையொட்டி, அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘கராத்தே பாபு’ (Karathey Babu) திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில், ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம் அரசியல் பின்னணியைக் கொண்ட அதிரடித் திரைப்படமாகத் தயாராகி வருகிறது. இப்படத்தில் ரவி மோகனுடன் இணைந்து சக்தி, நாசர், மற்றும் கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Screen Scene (@screensceneoffl)

ரவி மோகனின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் கராத்தே பாபு குழுவினர் வெளியிட்டுள்ள இந்த ஸ்பெஷல் போஸ்டர், இணையத்தில் சினிமா ரசிகர்களால் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் மற்றும் படக்குழுவினர் சார்பில் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.