‘வட்டி காசல வாட’ படத்தில் கடவுள் வேடத்தில் ரவி மோகன்: ஸ்ரீ வெங்கடேஸ்வராவாக களமிறங்கும் நடிகர்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய திரைப்படமான ‘வட்டி காசல வாட’ (Vaddi Kaasula Vaada) குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் ரவி மோகன் கலியுக தெய்வமான ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி (கோவிந்தா) கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
This is a divine blessing on my birthday playing lord Venkateswara himself
thank you Manoj, Anil Sunkara sir, director Tej and the while team
om namo Narayana
pic.twitter.com/cuVmOpJBZl
— Ravi Mohan (@iam_RaviMohan) September 10, 2026
தனது பிறந்தநாளை முன்னிட்டு இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரவி மோகன், “இது எனக்கு கிடைத்த ஒரு தெய்வீக ஆசிர்வாதம். ஸ்ரீ வெங்கடேஸ்வராவாகவே நடிப்பது பெருமையாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த மனோஜ், அனில் சுங்கரா சார், இயக்குநர் தேஜ் மற்றும் முழு குழுவிற்கும் நன்றி. ஓம் நமோ நாராயணா” என்று குறிப்பிட்டுள்ளார்.
Happiest Birthday to our beloved @iam_RaviMohan
Blessed to welcome you on board #VaddiKaasulaVaada in the divine role of Lord Govinda who resides in every heart
Excited for this special journey ahead. Om Namo Venkatesaya
@HeroManoj1 @tej_uppalapati @AnilSunkara1… pic.twitter.com/ch5cQruA2a
— AK Entertainments (@AKentsOfficial) September 10, 2026
இதை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான AK என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், “எங்கள் அன்பிற்குரிய ரவி மோகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். ஒவ்வொருவரின் இதயத்திலும் வசிக்கும் கோவிந்தாவின் திவ்யமான பாத்திரத்தில் உங்களை ‘வட்டி காசல வாட’ படத்திற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஓம் நமோ வெங்கடேசாய” எனத் தெரிவித்துள்ளனர். தேஜ் உப்பலபதி இயக்கத்தில், ஏ.கே. என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏடிவி தயாரிப்பில் உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
thank you Manoj, Anil Sunkara sir, director Tej and the while team
om namo Narayana 
@HeroManoj1 @tej_uppalapati @AnilSunkara1… pic.twitter.com/ch5cQruA2a

