`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் - வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார்.

ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் இந்த வளாகம் கட்டப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

முதல்வர் விஜய்

தற்போது அது தொடர்பான அரசாணை வெளியாகியிருக்கிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அரசாணையில், தமிழ்நாடு ஹவுசிங் போர்டு உள்ளிட்ட துறைகள், அமைப்புகளுக்குச் சொந்தமான நிலத்தில் இந்தப் புதிய தலைமைச் செயலகத்துடன் இணைந்த சட்டமன்ற வளாகம் கட்டப்படவுள்ளது.

Government GO About New Secretariat
Government GO About New Secretariat

நவீன வசதிகளுடன் 21 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் கட்டப்படவுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.