நாளை முதல் திரையரங்குகளில் ‘மண்டாடி’: சூரி நடிப்பில் உருவாகியுள்ள கடல் சாகச த்ரில்லர் படம் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைக் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நகைச்சுவை மற்றும் கதாநாயகன் சூரி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ‘மண்டாடி’ (Mandaadi) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘செல்பி’ திரைப்படத்தை இயக்கிய மதிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கடல் சாகசங்களை மையமாகக் கொண்ட ஒரு அதிரடி த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், சூரியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் சுஹாஸ், பிரபல நடிகர் சத்யராஜ், மற்றும் மஹிமா நம்பியார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும் டீசரும் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, படம் நாளை முதல் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் நேரடியாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடல் பின்னணியில் நடக்கும் விறுவிறுப்பான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.