Stock Market: வேகமாக விலை உயரும் Copper; கண்முன்னே காத்திருக்கும் ஆபத்தா?
உலோகம் என்றதுமே மனதில் முதலில் வருவது தங்கம், அடுத்தது வெள்ளி. இந்த இரண்டையும் காலம் காலமாகப் பயன்படுத்தி வருவதால், இந்த இரண்டிற்கும் நமக்கும் கனெக்ஷன் அதிகம்.
ஆனால், இப்போது இவை இரண்டையும் பின்னுக்குத் தள்ளிச் செம்பு வரலாற்று உச்சத்தைத் தொட்டு ‘தலைப்புச் செய்தி’களில் இடம்பெற்றுள்ளது. நேற்று செம்பு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் புதிய உச்சத்தைத் தொட்டது.
என்ன உச்சம்?
நேற்று லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஒரு டன் செம்பு 14,533 அமெரிக்க டாலர்கள் எனப் புதிய உச்சத்தைத் தொட்டது.
இது மட்டுமல்லாமல், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தச் செப்டம்பர் மாதம் வரை கணக்குப் போட்டுப் பார்த்தால், செம்பின் விலை 16 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ஏன் இந்தத் திடீர் உயர்வு?
> காலநிலை மாற்றம், சிலி, இந்தோனேசியா, காங்கோ ஆகிய நாடுகளில் குறைக்கப்பட்ட உற்பத்தி காரணமாக செம்பின் சப்ளை தற்போது குறைந்துள்ளது.
> அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்றதிலிருந்து, உலக நாடுகள் மீது வரி விதித்து வருகிறார்.
வரிகளைச் சட்டத்திற்குப் புறம்பானது என்று நீதிமன்றங்கள் அறிவித்த பிறகும், உலக நாடுகள் மீது வரி விதிக்க வேறு ரூட்டுகளைத் தேடி வருகிறார்.
இதனால், ட்ரம்ப் அடுத்த வரிகளை விதிப்பதற்கு முன்பு, வணிகர்கள் இருக்கும் செம்புகளை இப்போதிருந்த வரியில் ஏற்றுமதி செய்ய நினைத்து, வேகவேகமாக வணிகம் செய்து வருகின்றனர்.

> செம்பு சிப், செமிகண்டக்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏ.ஐ. டேட்டா சென்டர்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் போன்றவற்றுக்கு செம்பின் தேவை அதிகமாக இருக்கிறது. இதனால், அங்கேயும் செம்பு சென்றுவிடுகிறது.
> உலக நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் பலவீனமடைந்திருப்பதும் செம்பு விலை உயர்விற்குக் காரணம்.
இன்னும் உயருமா?
உலக அளவிலான கமாடிட்டி நிபுணர் மைக் மெக்லோன் தனது எக்ஸ் பக்கத்தில் செம்பு விலை உயர்வு குறித்து, “சிகாகோ வர்த்தகச் சந்தை செம்பு வர்த்தகம் - கண்முன்னே காத்திருக்கும் ஆபத்தா?
உலகப் பங்குச்சந்தைகளில் செம்பு கையிருப்பு மிகவும் அதிகரித்துள்ளது. வரலாற்றிலேயே இல்லாத அளவாக, கிட்டத்தட்ட 70 சதவீத செம்பு ‘சிஎம்இ’ (CME) கிடங்கிலேயே தேங்கிக்கிடக்கிறது.
ஹெட்ஜ் ஃபண்ட் முதலீட்டாளர்களும் இதில் அதிகளவில் பணத்தைப் போட்டு வைத்திருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, CME கிடங்கில் நிறைய செம்பு தேங்கிக்கிடக்கிறது. அது சந்தைக்குள் வந்தால், சப்ளை அதிகரித்து, டிமாண்ட் குறைந்து, விலை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும், இப்போது அதிகளவில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் திடீரென்று விற்றுவிட்டால், செம்பு விலை சரியலாம் என்றும் எச்சரித்துள்ளார்.
கவனம் மக்களே!
Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.
INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


