கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில்: சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைகிறார் செந்தமிழன் சீமான்!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றான ‘சேயோன்’ (Seyon) குறித்த மிக முக்கியமான மற்றும் அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் புகழ்பெற்ற ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செந்தமிழன் சீமான் அவர்கள் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்த அறிவிப்புடன், படத்தில் சீமானின் மிரட்டலான தோற்றம் மற்றும் மாஸான லுக் அடங்கிய பிரத்யேக அறிமுக வீடியோவையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கி வரும் சீமான், திரையுலகில் மீண்டும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் களமிறங்குவது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Raaj Kamal Films International (@rkfioffl)

ஏற்கனவே இப்படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சீமானின் இந்த எண்ட்ரி படத்தின் மீதான ஆவலை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் படப்பிடிப்பு விவரங்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.