மதுரையில் தடைகள் நீக்கி திருமண வரம் அருளும் சுயம்வர பார்வதி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!
இருமனம் இணைவது திருமணம் என்பார்கள் பெரியோர்கள். பிற சமயங்கள் எல்லாம் திருமண வாழ்வை மோட்ச சாதனத்துக்கு எதிராகச் சொன்னபோது நம் சநாதன மதம் மட்டுமே திருமணத்தை அறமாகச் சொன்னது. வாழ்வில் ஒவ்வொருவரும் கடந்துவரவேண்டிய நிலைகளில் ஒன்று கிரகஸ்தம். ஒருவர் இந்த உலக இன்பங்களை முறையாக அனுபவித்து மேலுலகுக்கு வேண்டிய புண்ணியங்களை சேர்த்துக்கொள்வதற்காகவே திருமணம். அதை ஒவ்வொருவரும் உரிய வயதில் அடைய வேண்டியது அவசியம்.
ஆனால் நவீன வாழ்வில் திருமணம் என்பது பலருக்கும் வெறும் கனவாகவே இருக்கிறது. காரணம், ஜாதகத்தில் இருக்கும் பல்வேறு தோஷங்கள். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை களத்திரஸ்தானம் அல்லது சப்தமஸ்தானம் எனப்படும் ஏழாமிடத்தில் என்ன கிரகம் இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஏழாமிடத்தில் எந்த கிரகமும் இல்லாவிட்டால், ஏழாமிடத்துக்கு உடைய கிரகம் எந்த வீட்டில் இருக்கிறதென்று பார்க்க வேண்டும்.
ஏழாமிடம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறதென்றால், இரண்டையும் ஐந்தையும் கூட்டினால் ஏழு அதாவது இரண்டாமிடம் தனம் , குடும்பம், வாக்குஸ்தானம். ஐந்தாமிடம் பூர்வ புண்ணியஸ்தானம். இந்த இரண்டு இடங்களை வைத்தே ஒருவருக்கு மனைவி அல்லது கணவன் அமைவார். இதை வைத்தே அவருக்கு எந்தக் குடும்பத்தில், எந்த திசையில் மணமகள், மணமகன் அமைவார்கள் என்பதைச் சொல்லி விடலாம் என்பார்கள் ஜோதிடர்கள்.
ஜாதகத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8 மற்றும் 12-ம் இடத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமாகும். என்றாலும் அதற்கும் பல விதி விலக்குகள் உண்டு. அதேபோன்று ஜாதக ரீதியாக நாகதோஷத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகங்கள் ராகு, கேது. ராகு, கேதுவை ‘நிழல் கிரகங்கள்’ என்றும் ‘சாயா கிரகங்கள்’, ‘சர்ப்ப கிரகங்கள்’ என்றும் கூறுவார்கள். இவையும் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை. ஒருவருக்கு நாகதோஷம் இருந்தால் திருமணம் தள்ளிப்போகும். புத்திரபாக்கியமும் தாமதமாகும்.
இப்படிப் பல்வேறு ஜாதக சிக்கல்களால் பலரின் திருமணம் தள்ளிப்போகிறது. உரிய வரன் தேடிவருவதில்லை. அவர்களின் குறைகளை எல்லாம் தீர்க்கும் அற்புதமான வழிபாடுதான் சுயம்வரபார்வதி ஹோமம்.
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்
தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதிதேவி, சிரத்தையோடு தவம் செய்து பரமேஸ்வரனை அடைந்தார். அவரது தவத்தைக் குலைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன. கடைசியில் பரமேஸ்வரன் மாறுவேடத்தில் வந்து, தேவியின் மன உறுதியைச் சோதித்த பிறகு அவரை மணந்தார்.
பார்வதிதேவிக்குக் கிடைத்ததைப் போன்ற இனிய துணை ஒவ்வொருவருக்கும் கிடைக்க வகை செய்யும் வழிபாடுதான் சுயம்வர பார்வதி ஹோமம். இந்த ஹோமத்துக்கான மந்திரங்களை பிரம்மா உருவாக்கியதாகத் தெரிகிறது. இந்த மந்திரங்கள், ‘உலகத்தில் உள்ள சகலவிதமான அசையும் - அசையாப் பொருள்களின் சரீரத்தையும், மனதையும் என்னிடம் ஆகர்ஷணம் செய்வாயாக!’ என்றே வேண்டுகின்றன.

யாருக்கு திருமணத் தடை இருக்கிறதோ, அவரை முன்னிட்டுச் செய்யப்படும் இந்த சங்கல்ப மந்திரங்களின் அர்த்தம், ‘கெட்ட பலன்களைத் தரும் கிரக அமைப்பினாலோ, தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவ காரியங்களாலோ, முன்னோர்கள் எப்போதோ செய்த தவறுகளாலோ, இவருக்குத் திருமணம் தடைபடுகிறது. இந்த நட்சத்திரத்தில், இன்ன ராசியில் பிறந்த இவருக்கு திருமணத் தடை நீங்கி, சுயம்வர பார்வதி - பரமேஸ்வரரின் அருள் பெற்று விரைவாகவும் உசிதமான காலத்திலும் திருமணம் நடைபெற இந்த ஹோமம் செய்கிறேன்’ என்பதே ஆகும்.
இந்த ஹோமத்தில் கலந்துகொண்டால் விரைவில் கல்யாண வரம் தேடிவரும். இதை வீட்டில் செய்வது மிகவும் கடினம். உரிய வேதியர்களைக் கொண்டே செய்ய வேண்டும். பெரும் பொருட்செலவு பிடிக்கும். அப்படிப்பட்ட ஹோமத்தை வாசகர்களுக்காக மதுரை மாநகரில் சக்தி விகடன் நிகழ்த்த இருக்கிறது. இந்த நிகழ்வை மதுரையைச் சேர்ந்த அனுஷத்தின் அனுகிரகம் டிரஸ்ட் இணைந்து வழங்குகிறார்கள். மேலும் தமிழ் மேட்ரிமோனியும் இணைந்து வழங்குகிறார்கள்.
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்
மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உணவுக்காகத் தவித்துக்கொண்டிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு உதவும் விதத்தில், மதுரையின் அட்சயபாத்திரம் என்னும் டிரஸ்ட் கடந்த 6 வருடங்களாக தினமும் 300 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். இதன் நிறுவனர் நெல்லை பாலு. இவர் மகாபெரியவரின் பக்தரும் ஆவார். எனவே அனுஷத்தின் அனுகிரகம் என்னும் பெயரில் ஓர் அமைப்பைத்தொடங்கி மதுரை எஸ்.எஸ் காலனியில் இருக்கும் தன் இல்லத்தில் மகாபெரியவருக்கு வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார். இதுவரை 200 க்கும் அதிகமான வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

தற்போது மகாபெரியவருக்கு மாபெரும் ஆலயம் ஒன்றை மதுரை பொய்கைக்கரைப்பட்டியில் கட்டத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இப்படி அறப்பணிகளையும் அருட்பணிகளையும் செய்துவரும் அனுஷத்தின் அனுகிரகம் டிரஸ்ட் சக்தி விகடனுடன் இணைந்து நடத்தும் சுயம்வர பார்வதி ஹோம வைபவம் வரும் செப்.17 - ம் தேதி நடைபெற உள்ளது. அன்னை மீனாட்சி அம்மன் கோயிலின் குடமுழுக்கு நடைபெறும் அதே மங்களகரமான நாளில் நடைபெறும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு சங்கல்பம் செய்தால் திருமண வரம் கிட்டும் என்பது நிச்சயம்.
இந்த வைபவம் மதுரை எஸ்.எஸ்.காலனி, 2 ஏ பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு என்னும் முகவரியில் இருக்கும் பிராமண கல்யாண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. காலை 10 மணிக்கு இந்த வைபவம் தொடங்கும். நிகழ்வில் கலந்துகொள்ள விருபுபவர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே மண்டபத்துக்கு வந்துவிட வேண்டும். நேரில் வந்து கல்ந்துகொள்பவர்களுக்கு சிறப்பு ரக்ஷை, குங்குமப் பிரசாதம் வழங்கப்படும்.
இந்த வைபவத்தில் கலந்துகொள்ளக் கட்டணம் ஏதும் இல்லை. என்றாலும் முன்பதிவு அவசியம். (முன்பதிவுக்குப்பின் இதுகுறித்து வேறு எந்தத் தகவலும் அனுப்பிவைக்கப்படாது.)
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

