டிபிக்கல் கலகலப்பான என்டர்டெய்னராக வரும் ‘ட்ரோன்ஸ்’: ஆல் இந்தியா தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றிய 5 ஸ்டார் செந்தில்!

தமிழ் திரையுலகில் புதுமையான கதைக்களங்களுடன் உருவாகிவரும் திரைப்படங்களின் வரிசையில் அடுத்ததாகக் கவனம் ஈர்த்துவரும் படம் ‘ட்ரோன்ஸ்’ (Drones). பன் பட்டர் ஜாம் புகழ் இயக்குநர் ராகவ் மிர்தத் (Raghav Mirdath) இயக்கத்தில், சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் மற்றும் தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த பிரபல விநியோகஸ்தர் 5 ஸ்டார் செந்தில் (5 Star Senthil) மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, குடும்பத்துடன் இப்படத்தைப் பார்த்தபோது கிடைத்த கலகலப்பான வரவேற்பும், சிரிப்பலையும் தன்னை வெகுவாக ஈர்த்ததாகத் தெரிவித்துள்ள அவர், உடனே இப்படத்தின் ஆல் இந்தியா தியேட்டரிக்கல் உரிமையை (All-India Theatrical Rights) முழுமையாகக் கைப்பற்றியுள்ளார்.

ஃபேன்டஸி, சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஹாரர் மற்றும் காமெடி எனப் பல ஜானர்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான கலகலப்பான என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளதால், சினிமா வட்டாரத்தில் இதன் மீதான எதிர்பார்ப்பு இப்போதே பல மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.