I’m Game: ``எனக்கு மிஷ்கின் சாரோட நடிக்க பயமா இருந்தது.! - நடிகை சம்யுக்தா

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

சம்யுக்தா விஸ்வநாதன்

அதில் கலந்துகொண்டு பேசிய Double Occupancy திரைப்படப் புகழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன், ``இந்த திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதிலிருந்தே சினிமா பார்த்து வளர்ந்த எனக்கு, திரையில் ஒரு எமோஷன் பார்க்கும்போது என்ன உணர்வு ஏற்படுகிறதோ, அதே உணர்வை ஆடியன்ஸிற்கு கடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. இயக்குனர் நஹோஸ் சார் கதையை விவரித்தபோதே இந்த படத்தில் நிச்சயமாக நடிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

மிஷ்கின் சாருடன் முதலில் நடிக்க கொஞ்சம் பயமாக இருந்தாலும், போகப் போக அது மிகவும் எளிதாக மாறியது. இப்படத்தில் ஒரு தமிழ் பெண்ணாக நடித்திருப்பது எனக்கு மிகவும் புதுமையான அனுபவமாக இருந்தது. தாயம் விளையாட்டில் தொடர்ந்து தாயம் விழுந்து முன்னேறுவது போல, இந்தப் படம் எனது திரைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று நம்புகிறேன். எப்போதும் போல ஊடகங்களும், ரசிகர்களும் செப்டம்பர் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்." எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.