பணம் உங்களுக்காக வேலை செய்யணுமா? - உங்களைப் பணக்காரர் ஆக்கும் 7 ரகசிய விதிகள்!

மாதச் சம்பளம், சேமிப்பு மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளை மட்டும் சேர்த்து வச்சா சீக்கிரமே பணக்காரர் ஆயிடலாம்னு நினைக்கிறீங்களா? ரொம்ப சாரி. நீங்க உங்களுடைய அடிப்படை ஐடியாக்களை மாற்ற வேண்டிய நேரம் வந்தாச்ச்சு!

உண்மையான செல்வம்ங்கிறது சும்மா சம்பாதிச்சு, அதை லாக்கர்ல பூட்டி வச்சு சேமிக்கிறதுல மட்டும் இல்லை. உங்களோட பணம், நேரம், திறமை - இந்த மூன்றையும் எப்படி ‘ஸ்மார்ட்டா’ கையாண்டு பணத்தை ஈசியாக ஈர்க்கும் நெம்புகோலாக (Leverage) மாத்துறீங்கங்கிறதுலதான் ஆட்டமே இருக்கு!

அந்த 7 கோல்டன் ரூல்ஸையும் பாத்துருவோமா?

1. எல்லாத்துலயும் ஆல்-ரவுண்டர் ஆக நினைக்காதீங்க; ஏதாவது ஒரு திறமையில் ராஜா ஆகுங்க!

வேலைக்குச் சேர்ந்த உடனே ஒரே நேரத்துல 4 புது கோர்ஸ்ல சேருவது, 3 பார்ட் டைம் ஜாப் பண்ணுறதுன்னு எல்லாத்துலயும் காலை வைக்காதீங்க. முதல்ல உங்க தற்போதைய வேலையில (Core Job) உங்களை யாராலும் ரீப்ளேஸ் பண்ண முடியாத அளவுக்கு ஒரு குறிப்பிட்ட திறமைல மாஸ்டர் ஆகுங்க. அங்க உங்க இடமும் வருமானமும் வலுவானத்துக்கு அப்புறம்தான் அடுத்தடுத்த சைடு வருமானங்கள் பற்றி யோசிக்கணும்!

2. சம்பளத்த நம்பாதீங்க... சொத்துக்களை (Asset) பெருக்குங்க!

உங்க பாக்கெட்ல இருந்து பணத்தை வெளியே எடுத்தா அது செலவு (Liability). உங்க பாக்கெட்டுக்குள்ள பணத்தைக் கொண்டு வந்தா அதுதான் சொத்து (Asset)!

வாடகை வருமானம், டிஜிட்டல் கன்டென்ட், ராயல்டி, பங்குச்சந்தை முதலீடுகள்னு, நீங்க தூங்கும்போதும் சம்பாதிக்கக்கூடிய சொத்துக்களை உருவாக்குங்க. நேரத்தை விற்று பணம் சம்பாதிக்கிறதை விட்டுட்டு, சொத்து மூலமா பணம் வர வைப்பதே ‘கெத்து’!

3. செலவைக் குறைப்பதே வேலையா? வருமானத்தைப் பெருக்குங்க!

ஒரு மாசத்துக்கு டீ செலவையோ அல்லது சின்னச் சின்ன பொழுதுபோக்குகளையோ கட்டுப்படுத்தலாம். ஆனா செலவைக் குறைக்க ஒரு எல்லை உண்டு, வருமானத்தைப் பெருக்க எல்லையே இல்லை! புது ஸ்கில் கத்துக்குங்க, சைடு பிசினஸ் பண்ணுங்க. “எதை வெட்டலாம்?” அப்படின்னு யோசிப்பது 20%, “எப்படி வருமானத்தைக் கூட்டலாம்?”னு யோசிப்பது 80% ஆக இருக்கணும்!

4. உங்க நேரத்தின் மதிப்பை அதிகரிங்க!

₹100 மிச்சப்படுத்த 2 மணி நேரம் அலையறீங்களா? அப்படின்னா உங்க நேரத்தோட விலை வெறும் ₹50-தான்! அதே 2 மணி நேரத்துல ஒரு புது டெக்னாலஜி அல்லது ஃபைனான்ஸ் திறமையை வளர்த்துக்கிட்டா, உங்க மார்க்கெட் வேல்யூ எகிறும். பணக்காரங்க ரூபாயை மட்டும் சேமிக்கிறதில்ல... தங்களோட ஒரு மணி நேரத்தோட மதிப்பை உயர்த்துறாங்க! உங்களுடைய திறமை = உங்களோட நேரத்தின் மதிப்பு!

5. காம்பவுண்டிங் மேஜிக்... சீக்கிரமே ஸ்டார்ட் பண்ணுங்க!

முதலீட்டுல மிகப்பெரிய பலமே ‘நேரம்’தான். சின்ன வயசுலேயே முதலீடு செய்ய ஆரம்பிச்சிட்டா, காம்பவுண்டிங் (Compounding) வட்டி மூலமாவே மிகப்பெரிய கார்ப்பஸ் (Corpus) சேர்ந்துடும். தாமதமா லட்சக்கணக்குல முதலீடு பண்றதை விட, சீக்கிரமா தொடங்குனா சிறு தொகையே உங்களை கோடீஸ்வரன் ஆக்கும்

6. லீவரேஜ் (Leverage) வித்தையை கத்துக்குங்க!

நீங்க மட்டும் தனியா வேலை செஞ்சா ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான் இருக்கு. அப்புறம் எப்படி பெரிய பணக்காரர் ஆகுறது?

  • மனிதவளம்: மத்தவங்களோட திறமையையும் நேரத்தையும் பயன்படுத்துங்க.

  • முதல்: பணத்தை முதலீடு செய்து பணத்தையே வேலை செய்ய வைங்க.

  • தொழில்நுட்பம்: ஒருமுறை கடின உழைப்பைப் போட்டா போதும் - ஒரு சாஃப்ட்வேர் அல்லது டிஜிட்டல் கண்டென்ட் உருவாக்கி பலருக்கு விற்கலாம். நீங்க தூங்கும்போதும் உங்க பாக்கெட் நிரம்பணும், அதுதான் அல்டிமேட் கோல்!

7. யோசிச்சது போதும்... களத்துல இறங்குங்க!

புத்தகம் படிக்கிறது, ஃபைனான்ஸ் வீடியோ பார்க்கிறது எல்லாம் ஓகே... ஆனா அது மட்டுமே உங்களை நிதிச் சுதந்திரம் அடைஞ்சவரா ஆக்காது. ஆக்ஷன் (Action) தான் நிஜமான ரிசல்ட் தரும்!

இன்றைக்கே ஒரு புது ஸ்கில் தேர்ந்தெடுங்க, ஒரு சின்ன SIP அல்லது முதலீட்டைத் தொடங்குங்க. பணக்காரர் ஆகுறது ஒரே நாள்ல அடிக்கிற ஜாக்பாட் இல்ல... தினமும் நீங்க எடுக்கிற சரியான முடிவுகளோட நெட்வொர்க்!

என்ன? ஸ்டார்ட் பண்ணலாமா?

Labham Workshop Sep 02 2026

நீங்க பணக்காரர் ஆகணுமா? உங்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி!

தலைப்பு: பணக்காரர் ஆக 10 கட்டளைகள் - கோடீஸ்வரர் ஆவது எப்படி?
சம்பாத்தியம், சேமிப்பு, முதலீடு, சொத்து சேர்ப்பு & நிதி பாதுகாப்பு பற்றிய விழிப்புர்ணவு ஆன்லைன் நிகழ்ச்சி
நாள்: செப்டம்பர் 02, 2026, புதன்
நேரம்: மாலை 07 - 8:30 மணி - இந்திய நேரம்
பேச்சாளர்: டீம் லாபம்

முன்பதிவு செய்ய: https://labham.money/events/webinar-sep02-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_sep02_2026

பண ரகசியங்களை அறிந்து வாழ்வில் முன்னேறுங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.