முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது; ஆனால்... - வைகோ என்ன சொல்கிறார்?

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் எனத் தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், "ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று தவெகவிற்கு அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று (ஆக.30) எச்சரிக்கை விடுத்திருந்தார்.

முதல்வர் விஜய்

இந்நிலையில் விஜய்தான் அடுத்த பிரதமர் என்று எழுந்திருக்கும் முழக்கம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த வைகோ, "பிரதமராக வேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ முதல்வர் விஜய்க்குத் துளியளவும் கிடையாது.

முதல்வரின் கற்பனையில் கூட அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதால் அமைச்சர்கள் நினைத்தபடி பேசக்கூடாது.

இந்தியாக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதால் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும்.

வைகோ
வைகோ

வேறு யாரையும் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது. இதுபோன்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள், தவெகவினருக்கு முதல்வர் அறிவுறுத்த வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.