Dhanush’s Next Film Update: அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: தனுஷுடன் இணையும் மாஸ் கூட்டணி – கிராமத்து பின்னணியில் அதிரடி விருந்து!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சிறுத்தை சிவா (Siruthai Siva) குறித்த லேட்டஸ்ட் சினிமா தகவல்கள் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன. ‘வாலைப்பேச்சு’ தகவல்களின்படி, இயக்குநர் சிறுத்தை சிவாவின் அடுத்த இயக்கத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) நடிக்கவுள்ளதாகவும், இதற்கான கதையைத் தனுஷ் கேட்டு ஓகே செய்துவிட்டதாகவும் கூறWப்படுகிறது.
தற்போது இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலான படப் பணிகளில் கவனம் செலுத்திவரும் தனுஷ், அதனை முடித்த கையோடு சிறுத்தை சிவாவின் இப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ் ஒரு முழுமையான கிராமத்து கமர்ஷியல் (Rural Commercial Zone) மற்றும் செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் களத்தில் களமிறங்கவுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த காலப் படங்களின் சறுக்கல்களுக்குப் பிறகு, சிறுத்தை சிவா இந்த கிராமத்துப் பின்னணிப் படம் மூலம் ஒரு வலுவான கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


