Nimisha Sajayan: தூக்கமின்மை, கடுமையான மனநிலை மாற்றங்கள்... - உடல் எடை குறைப்பு பற்றி நிமிஷா சஜயன்

நடிகை நிமிஷா சஜயன், தான் நடித்திருக்கும் பாபிதா சிங் ரிப்போர்ட்டிங் திரைப்படத்திற்காக மேற்கொண்ட கடினமான உடல் எடை குறைப்பு குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

Babita Singh Reporting

இந்தப் படத்தின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அவர் சுமார் 14 கிலோ எடையை அதிகரித்துள்ளாராம்.

இது குறித்தும், ஏற்றிய எடையை குறைப்பதற்கும், அதற்கிடையில் இவர் சந்தித்த விஷயங்கள் குறித்தும் பதிவிட்டிருக்கிறார்.

இது குறித்து அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நிமிஷா சஜயன், "இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் கிட்டத்தட்ட 14 கிலோகிராம் எடையைக் கூட்டினேன் (58 கிலோகிராமிலிருந்து 72 கிலோகிராம் வரை).

உண்மையிலேயே, அதற்குப் பிறகு நான் மேற்கொண்ட எடையைக் குறைக்கும் பயணம் முற்றிலும் வேறொரு கதையாக இருந்தது. முதல் 10 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன.

சரியான தூக்கமின்மை, கடுமையான மனநிலை மாற்றங்கள், சோர்வு, விரக்தி என "என்னால் இதைச் செய்யவே முடியாது" என்று உண்மையிலேயே தோன்றிய தருணங்கள் ஏராளம். சில நாட்களில் என் உடற்பயிற்சியாளரின் முன்னால் அமர்ந்து "என்னால் இனிமேல் முடியாது" என்று கூறி அழுதிருக்கிறேன்.

View this post on Instagram

A post shared by NIMISHA BINDU SAJAYAN (@nimisha_sajayan)

அவர் மட்டும் இல்லையென்றால், நான் உண்மையிலேயே இதனைப் பாதியிலேயே கைவிட்டிருப்பேன். இந்த முழுப் பயணத்திலும் அவர்தான் என் பக்கபலமாக இருந்தார்.

எனக்கு ஊக்கம் தேவைப்பட்ட நேரத்தில் என்னை ஊக்கப்படுத்தினார்; நான் கைவிட நினைத்தபோது உற்சாகப்படுத்தினார். ஒவ்வொரு நாளும் அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்.

நான் விரக்தியடைந்து, களைப்புற்று, பயிற்சியை நிறுத்திவிடலாம் என்று நினைத்த நாட்கள் எத்தனையோ உண்டு. ஆனால் ஏதோ ஒரு வழியில், என்னை அடுத்த நாள் மீண்டும் வரவைத்து, முயற்சி செய்ய வைத்தார்.

திரும்பிப் பார்க்கும்போதுதான் எனக்குப் புரிகிறது, இந்தப் பயணம் வெறும் எடையைக் குறைப்பதைப் பற்றியது மட்டும் அல்ல; அது பொறுமை, சரியான வழிமுறையை நம்புவது, எல்லாவற்றிற்கும் மேலாகச் சரியான நபர் உங்களுடன் இருப்பது பற்றியதாகும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.