Jailer 2: அது முடிந்ததுமே ரஜினி சார் என்னிடம் சொன்ன விஷயம்! - நடிகை பூர்ணா
நடிகை பூர்ணா சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் 2 படத்தின் பாடலில் நடனமாடியிருந்தார்.
ரஜினிகாந்தின் இத்திரைப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் பாடலில் நடனமாடியிருப்பது குறித்து நெகிழ்ச்சியோடு பேசியிருக்கிறார் நடிகை பூர்ணா.
இது குறித்து அவர், "சூப்பர் ஸ்டார் ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்பது திரையுலகில் உள்ள அனைவரின் கனவு.
சிறுவயதில் படையப்பா படத்தின் மின்சார கண்ணா பாடலைப் பார்க்கும்போதெல்லாம், ரம்யா கிருஷ்ணன் மேடத்திற்குப் பதிலாக நான் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

பல மேடைகளில் அந்தப் பாடலுக்கு நடனமாடியும் இருக்கிறேன். ஆனால், ஒருநாளில் நேரில் அவரோடு சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடுவேன் என்று நான் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை.
எனது கனவு நனவாகியுள்ளது. முதல் ஷாட் முடிந்ததுமே ரஜினி சார் எனது கண்களைப் பாராட்டிப் பேசினார். எத்தனையோ சிறந்த நடிகைகளுடன் நடித்த ஒரு சூப்பர் ஸ்டாரிடமிருந்து எனக்கு இந்தப் பாராட்டு கிடைத்தது மிகப் பெரிய விஷயம்" எனப் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


