Ashok Selvan’s Next Release: ஒரு படத்துக்கு 500 கதைகள் வருது: மில்டன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் ‘குட் நைட்’ (Good Night), ‘லவ்வர்’ (Lover) மற்றும் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family) போன்ற வித்தியாசமான மற்றும் தரமான கதைகளைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் (Yuvaraj Ganesan) சமீபத்திய பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
திரைப்படத் தயாரிப்பு அனுபவங்கள் குறித்து அவர் கூறுகையில், “எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் 100 முதல் 500 கதைப் pitches வரை வருகின்றன. ஆனால் எங்களால் ஆண்டுக்கு 2 அல்லது 3 படங்கள் மட்டுமே தயாரிக்க முடிகிறது. நாங்கள் ‘குட் நைட்’ படம் செய்தபோது, தொடர்ந்து உடல்நலக் குறைபாடு சார்ந்த லவ் ஸ்டோரிகளாக அதாவது இருமலுடன் வரும் நாயகன் போன்ற கதைகளாக வரத் தொடங்கின. அதேபோல் ‘லவ்வர்’ படத்திற்குப் பிறகு உறவுகளின் இருண்ட பக்கங்களை மையமாகக் கொண்ட கதைகளும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றிக்குப் பின் ஃபீல்-குட் கதைகள் மட்டுமே எங்களால் உருவாக்க முடியும் என்ற பிம்பமும் உருவாகியது. ஆனால் நாங்கள் எப்போதும் வித்தியாசமான களங்களையே ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.
மேலும் தங்களின் அடுத்த படைப்பு குறித்துப் பேசிய அவர், “எங்களது அடுத்த படம் முழுமையாக நிறைவடைந்துவிட்டது. இதில் அசோக் செல்வன் (Ashok Selvan) மற்றும் நிமிஷா சஜயன் (Nimisha Sajayan) இணைந்து நடித்துள்ளனர். இந்த வித்தியாசமான திரைக்கதைக்காக நாங்கள் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் முழுமையாக உழைத்துள்ளோம். இப்படம் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


