Dorothy Update: இளையராஜா இசையில் அடுத்த அதிரடி: வருகிறது ‘ராஜா ட்ரான்ஸ்’!: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்திலிருந்து வெளியாகும் அடுத்த செம அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில், இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) இசையில் உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘டோரதி’ (Dorothy). கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Thanks a ton for making #KalyanaVirundhu a Total #RaajaSambhavam
Maestro @ilaiyaraaja Sir
Get ready for the next…
The #RaajaTrance coming soon…
#DorothyfromSep25 pic.twitter.com/VD1ysNcpKd
— karthik subbaraj (@karthiksubbaraj) August 27, 2026
இப்படத்தின் முதல் பாடலான ‘கல்யாண விருந்து’ (Kalyana Virundhu) வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ரசிகர்களால் ஒரு உண்மையான ‘ராஜா சம்பவம்’ (Raaja Sambhavam) என்று கொண்டாடப்பட்டது. 80 மற்றும் 90-களின் இளையராஜாஸின் ரெட்ரோ இசையை நியாபகப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இப்பாடலின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இப்படத்தின் அடுத்த இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி, இளையராஜா இசையின் மிரட்டலான அனுபவத்தைத் தரும் ‘ராஜா ட்ரான்ஸ்’ (Raaja Trance) விரைவில் வெளியாகவுள்ளதாகக் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார். மேலும், இப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி (September 25) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.





