இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

 

கொழும்புவில் நடைபெற்று வரும் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 138 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணிக்காக தேவ்தத் படிக்கல் 117 ரன்களும், துருவ் ஜூரல் ஆட்டமிழக்காமல் 115 ரன்களும் விளாசினர். இதுதவிர ரிஷப் பந்த் 63, சுப்மன் கில் 50, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்கள் சேர்த்தனர்.

 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பசிந்து சூரியபண்டாரா 80 ரன்களும், சோனல் தினுஷா 103 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதார் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

பின்னர் ஃபாலோ-ஆன் பெற்ற இலங்கை அணி 2வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வருகிறது. 5வது நாள் ஆட்டத்தின் போது 138 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்திருந்தது. சோனல் தினுஷா மீண்டும் சதமடித்து 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பசிந்து சூரியபண்டாரா 92, கமிந்து மெண்டிஸ் 55 ரன்கள் எடுத்தனர்.

 

இலங்கை அணி தற்போது இந்தியாவை விட 180 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த போராடி வரும் நிலையில், போட்டியின் முடிவு டிராவை நோக்கி செல்கிறது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.