Ranabaali Update: அக்டோபர் 16-ல் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் ‘ரணபலி’: தசராவை குறிவைக்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா பீரியட் படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றான ‘ரணபலி’ (Ranabaali) குறித்த அதிகாரப்பூர்வ புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டைலிஷ் நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) மற்றும் முன்னணி நடிகை ரஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ராகுல் சங்கிருத்யன் இயக்குகிறார்.
View this post on Instagram
பிரிட்டிஷ் காலத்துச் பின்னணியில், 19-ஆம் நூற்றாண்டு வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் இப்படம் உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏஜே-அதுல் இசையமைக்கின்றனர். இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் வோஸ்லூ மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே செப்டம்பர் 11-ல் வெளியாகவிருந்த இப்படம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தற்போது வரவிருக்கும் தசரா பண்டிகையைக் கொண்டாடும் விதமாக அக்டோபர் 16-ஆம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் கிராண்டாக வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


