திருச்சி: டிப்பர் லாரி முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை; இளைஞரின் பின்னணி குறித்து போலீஸ் விசாரணை

திருச்சி மாவட்டம், கிராப்பட்டி மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து செல்போன் பேசிக்கொண்டே ஒரு இளைஞர் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், அந்த இளைஞர் திடீரென்று செல்போனைக் கீழே போட்டுவிட்டு, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி முன் பாய்ந்தார். இதில், அவர் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

trichy

இதுகுறித்து, திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் யார், எதற்காக டிப்பர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்தார் என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் திருச்சி கிராப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.