இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

 

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது. 

 

கொழும்பில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 138 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தேவ்தத் படிக்கல் 117 ரன்களும், துருவ் ஜுரேல் ஆட்டமிழக்காமல் 115 ரன்களும் விளாசினர். ரிஷப் பந்த் 63 ரன்களும், கேப்டன் ஷுப்மன் கில் 50 ரன்களும் எடுத்தனர்.

 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சோனல் தினுஷா 103 ரன்கள் குவித்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். பசிந்து சூரியபண்டாரா 80 ரன்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், மானவ் சுதார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

213 ரன்கள் பின்தங்கியதால் இலங்கை அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது. 2வது இன்னிங்ஸிலும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், சூரியபண்டாரா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். சூரியபண்டாரா 88 ரன்களுடனும், மெண்டிஸ் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது.

 

இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வரும் நிலையில்   மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்ய இந்திய பந்துவீச்சாளர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.