சோஃபா செட் இல்ல, லாக்கரே வந்தாலும்கூட தேமுதிக தன்னுடைய..!- கூட்டணி மாறுவது குறித்து பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று (ஆகஸ்ட். 25) கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

கூட்டத்தில் பேசிய அவர், "நமக்கு (தேமுதிக) என்ன அழைப்பு வரவில்லை என்று நினைக்கிறீர்களா? இன்றைய முதல்வர் அவர்களே அழைத்தார்.

ஆனாலும் நாம் ஒரு கொள்கை, ஒரு முடிவை எடுத்துவிட்டால் அந்தக் கொள்கையில் நிச்சயமாக உறுதியாக நிற்போம்.

விஜய் - பிரேமலதா விஜயகாந்த்

சோஃபா செட் இல்லை, பீரோ இல்லை, லாக்கரே வந்தாலும் கூட தேமுதிக தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறாது.

ஏனென்றால் கொள்கை முக்கியம். ஒரு கூட்டணியை வைத்து ஜெயிப்பார்கலாம், ஜெயித்த பிறகு தன்னுடைய சுயநலத்திற்காக இன்னொரு கட்சிக்கு சென்று விடுவார்களாம்.

அந்த நிலைப்பாடை தேமுதிக எப்போதும் எடுக்காது. கேப்டனுக்காவே வாழ்ந்து என் கண்முன்னாடி நிற்கும் வீரர்களே நீங்கள் தான் நாளைய வரலாறு.

எத்தனையோ எம்எல்ஏக்கள் தேமுதிகவை விட்டு சென்றார்கள். அரசியலில் வெற்றி வரும் தோல்வி வரும் அதையெல்லாம் கண்டு அஞ்சக்கூடிய கட்சி தேமுதிக இல்லை.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

எதற்கும் அஞ்சாமல் நாம் கொண்ட கொள்கையில் தலைவருடைய கனவு, லட்சியத்தை நாம் வென்று எடுத்து நிறைவேற்றுவோம். விருதாச்சலத்துக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதோ அது நிறைவேற்றி தரப்படும்" என்று பேசியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.