கச்சா எண்ணெய் விலையில் அமெரிக்காவிற்கும், ட்ரம்பிற்கும் சறுக்கல்; ஓமன், ஈரானுக்கு சக்சஸ்?

ஈரான் போர் காரணமாக, கடந்த சில நாள்களாகவே கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்களைத் தாண்டி விற்பனையாகிக் கொண்டிருந்தது.

இந்த நேரத்தில்தான், கடந்த 19-ம் தேதி, ஈரானுக்கு எதிரான ‘பொருளாதார D-Day’-ஐ அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் ஒவ்வொரு முன்னெடுப்பையும் எடுக்கும்போதும், கச்சா எண்ணெய் விலை உயரும்.

ஆனால், ட்ரம்பின் லேட்டஸ்ட் அறிவிப்பிற்குக் கச்சா எண்ணெயின் விலை உயரவில்லை.

ட்ரம்ப்

கச்சா எண்ணெய் விலை குறைவு

ட்ரம்பின் பொருளாதாரத் தடை அறிவிப்பின் போது, 91 டாலருக்கு மேல் இருந்த பிரண்ட் கச்சா எண்ணெய், தற்போது 86 டாலர் என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

WTI கச்சா எண்ணெய் தற்போது 80 டாலர் என்கிற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்காவின் மிகப்பெரிய அறிவிப்பிற்குப் பின்னும், கச்சா எண்ணெய் விலை உயரவில்லை என்பதைச் சறுக்கலாகக் காணலாம்.

எந்த வகையில் சறுக்கலாக பார்க்கப்படுகிறது?

ஹார்முஸ் நீர்ச்சந்தியின் கட்டுப்பாடு இன்னும் ஈரானின் பக்கமே இருக்கிறது. அமெரிக்கா தங்களிடம் ஹார்முஸ் நீர்ச்சந்தியின் கட்டுப்பாடு வந்துவிட்டது என்று சொன்னாலும், அனைத்து நிகழ்வுகளைப் பார்க்கும்போது உண்மை தெளிவாகிறது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி ஒரு இயற்கையான நீர்ச்சந்தி. அதனால், அது உலகத்தின் பொதுச்சொத்து. ஆனால், ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, ஈரான் அதை முடக்கி சொந்தம் கொண்டாடுகிறது.

இந்த நீர்ச்சந்தி ஈரான் மற்றும் ஓமனின் எல்லையில் அமைந்திருக்கிறது. இதனால், இரு நாடுகளும் ஹார்முஸ் நீர்ச்சந்தி போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்தக் கட்டுப்பாட்டிற்கான வரைவும் தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி
ஹார்முஸ் நீர்ச்சந்தி

இது அறிவிக்கப்பட்டால், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியே போக்குவரத்து எளிதாகும் என்ற நம்பிக்கையில்தான் கச்சா எண்ணெய் விலை உயரவில்லை.

ஹார்முஸ் எங்களிடம் இருக்கிறது... ஈரானுடன் ஓமன் பேச்சுவார்த்தை நடத்தினால், ஓமன் அவ்வளவுதான் என்று ட்ரம்ப் எச்சரித்து வந்த நிலையில், ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதே அமெரிக்காவிற்குப் பெரிய சறுக்கல்தான்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.