Once More: என் வாழ்க்கையில் கடினமான காலக்கட்டத்தில் இருந்தபோது தான்.!- அதிதி ஷங்கர் ஷேரிங்
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடித்துள்ள படம் ஒன்ஸ் மோர்.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து இருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அதிதி சங்கர், "எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த ஸ்ரீகாந்த் சாருக்கு நன்றி.
என் வாழ்க்கையில் கொஞ்சம் கடினமான காலக்கட்டத்தில் இருந்தபோது ஒன்ஸ் மோர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது ஆறுதலாக இருந்தது.
அர்ஜுன் தாஸுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் இரண்டு முறை உங்களை (அர்ஜுன் தாஸ்) சந்திக்கும்போது ஒரு ரசிகையாக உங்களைச் சந்தித்தேன்.
முதல் முறையாக அனிரூத் கான்செர்ட்டில் தான் சந்தித்தேன். ரசிகையாக உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கேட்டேன். நீங்கள் சிரித்தீர்கள்.

இரண்டாவது முறை நீங்கள் எனக்கு JFW விருது கொடுக்கும்போது சந்தித்தோம். மூன்றாவது முறை ஒன்ஸ் மோர் பூஜை நிகழ்ச்சியில் உங்களுடன் பணியாற்றவிருக்கும் ஒரு நடிகையாக சந்தித்தேன்.
அழகான பயணம் உங்களுடன் எனக்கு அமைந்திருக்கிறது. ஒரு வில்லனாக அர்ஜுன் தாஸை நீங்கள் எவ்வளவு ரசித்தீர்களோ... ஒரு லவ்வர் பாயாகவும் இவரை ரசிப்பீர்கள்" என்று பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


