Toxic: சினிமாவை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; நாங்கள் ஒன்றும்... - டாக்ஸிக் பட விழாவில் யஷ்
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டாக்ஸிக்’.
இந்தப் படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் டாக்ஸிக் பட விழாவில் கலந்துக்கொண்டு பேசிய யஷ், "சினிமாவை ஒருபோதும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாங்கள் ஒன்றும் பெரிதாகச் சாதித்துவிடவில்லை.
வாழ்க்கையில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதைக் கனவாகக் கொண்டு உழையுங்கள்.
மரியாதையும் வெற்றியும் உங்களைத் தேடி வரும். நாம் ஏதாவது ஒன்றில் தோல்வியடைந்தால், உலகத்தைக் குறை சொல்லாதீர்கள். அதற்கு நாம் மட்டுமே பொறுப்பு" என்று ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


