Sowcar Janaki: நடிகை செளகார் ஜானகி காலமானார்! - திரையுலகினர் இரங்கல்
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், இன்று மதியம் 2 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 94. சங்கரமஞ்சி ஜானகி என்ற இயற்பெயர் கொண்ட இவர், சௌகார் ஜானகி என்றே திரையுலகிலும் ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் கடந்த 70 ஆண்டுகளாக 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான மூத்த கலைஞராகத் திகழ்ந்தார்.
திரைத்துறை மற்றும் கலை உலகிற்கு இவர் ஆற்றிய வாழ்நாள் சேவையைப் பாராட்டி, ஒன்றிய அரசு 2022-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. மறைந்த நடிகை சௌகார் ஜானகிக்கு யக்னா பிரபா கோட்டி, வெங்கடரமண சங்கரமஞ்சி, சசி ராவ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த மூத்த நடிகை சௌகார் ஜானகியின் மறைவு, ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தேனாம்பேட்டையிலுள்ள அவருடைய இல்லத்தில் இன்று மாலை 5 மணி முதல், அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


