சட்டையைப் பிடித்து அறைந்த ஆசிரியை; சுருண்டு விழுந்து இறந்த சிறுவன் - ஆந்திரா பள்ளியில் அதிர்ச்சி!
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள லிட்டில் கார்டன் என்ற தனியார் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியைத் தாக்கியதில் 6 வயதான பிரணாய் தேஜா என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காலையில் ஆரோக்கியமாகப் பள்ளிக்குச் சென்ற தன் மகனை, ஆசிரியை பிரம்பால் தாக்கிய அதிர்ச்சியிலும் பயத்திலுமே சுருண்டு விழுந்து இறந்ததாகப் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
பள்ளி சிசிடிவி காட்சிகளிலும் ஆசிரியை சிறுவனை அடிப்பதும், அடுத்த சில வினாடிகளில் அவன் சுருண்டு விழுவதும் பதிவாகியிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த துயரச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த கல்வித்துறை மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


