`ஏமாற்றிய மனைவியை கொன்றுவிட்டேன் - சகோதரியை கொலைசெய்து விட்டு தானும் தற்கொலை செய்த வங்கி ஊழியர்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணியாற்றி வருபவர் மனஸ் பாஜ்பாய். இவரது மனைவி திவ்யா மிஸ்ரா. இவரும் தனியார் வங்கி ஒன்றில் மக்கள் தொடர்பு மேலாளராக இருக்கிறார்.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்கின்றனர். திவ்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பாஜ்பாய் சந்தேகப்பட்டார். எனவே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். திவ்யா தனக்கு விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.
இதனிடையே பாஜ்பாய் மதியம் தனது மனைவி வேலை செய்யும் தனியார் வங்கி கிளையை சென்றார்.
வங்கிக்கு வெளியில் வாக்குவாதம்
அங்கு அவர் தனது மனைவி திவ்யாவை வங்கியில் இருந்து வெளியில் வரும்படி கேட்டுக்கொண்டார். வங்கிக்கு வெளியில் வந்த திவ்யாவுடன் பாஜ்பாய் சிறிது நேரம் வாக்குவாதம் செய்தார். அந்நேரம் திவ்யா வங்கிக்குள் செல்ல முயன்றார். ஆனால் அவரை தடுத்து நிறுத்தி தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டார்.
உடனே வங்கியில் இருந்த மற்ற ஊழியர்கள் ஓடி வந்து திவ்யாவை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் திவ்யா அதற்குள் இறந்துபோனார்.
இருவரும் வங்கிக்கு வெளியில் வாக்குவாதம் செய்தது மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியது போன்றவை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. பாஜ்பாய் பின்னர் வங்கியிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினார், அங்கு அவர் தனது சகோதரி ஷீபா (31) என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அடுத்த சில நிமிடங்களில் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
`என் மனைவியை கொன்றுவிட்டேன்
முதல் கொலை நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு பாஜ்பாய் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேடஸில், “இன்று என் மனைவி என்னை ஏமாற்றியதால் நான் கொன்றேன், இப்போது நான் என்னையும் என் சகோதரியையும் கொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
கொலை, மரணங்கள் மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

